நெல்லையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செண்பகம், பொதுச் செயலாளர் சின்னசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். குப்பைகளை பிரிக்க கட்டாயப்படுத்தக்கூடாது. பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி பணத்தை முழுவதும் மாதாமாதம் வருங்கால வைப்பு அலுவலகத்தில் முறையாக செலுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி தினசரி சம்பளம் ரூ.634 நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சுடலைராஜ், இணைச்செயலாளர் வண்ணமுத்து, நிர்வாகிகள் மாரியப்பன், நாகராஜன், சுடலைமணி, சிவராமன், மாரியம்மாள், வரகுணன், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story