சேரன்மாதேவியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


சேரன்மாதேவியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 10:53 PM GMT (Updated: 27 Feb 2021 10:53 PM GMT)

சேரன்மாதேவியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வசுந்தரி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட இணை செயலாளர் கற்பகம் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story