கோபியில் பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கோபியில் பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடத்தூர்
கோபியில் பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலான பொக்லைன் எந்திரங்கள் இயங்கவில்லை. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘பொக்லைன் எந்திரங்களின் உதிரி பாகங்கள், வரி, இன்சூரன்ஸ், ஆயில், டிரைவர்களுக்கான படி ஆகியவற்றின் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொக்லைன் எந்திரங்களை குறைந்த வாடகைக்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது. இதை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’ என்றனர்.
Related Tags :
Next Story