தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்


தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்
x
தினத்தந்தி 27 Feb 2021 11:11 PM GMT (Updated: 27 Feb 2021 11:13 PM GMT)

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

ஊட்டி,

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், ஊட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்டங்களை செய்யவில்லை.

கடந்த தேர்தல்களைபோல வருகிற சட்டமன்ற தேர்தலும் தமிழகத்தில் அமைதியாக நடக்கும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எவ்வித முறைகேடுகளும் செய்ய முடியாது. எம்.எல்.ஏ.க்களை விலைபேசி பா.ஜனதா ஆட்சி கவிழ்ப்பு செய்து வருகிறது. இது கோவா, மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியிலும் நடந்து உள்ளது.

புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரும்போது, அங்கு காங்கிரஸ் முதல்-அமைச்சர் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்று இருக்கிறது. புதுச்சேரி மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பா.ஜனதாவை நிராகரிப்பார்கள். ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. 

கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நபர்கள் எதிர்காலத்தில் வங்கிகளில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story