கடையநல்லூரில் டிராக்டர் மோதி 9 வயது சிறுமி சாவு


கடையநல்லூரில் டிராக்டர் மோதி 9 வயது சிறுமி சாவு
x
தினத்தந்தி 27 Feb 2021 11:52 PM GMT (Updated: 28 Feb 2021 12:43 AM GMT)

கடையநல்லூரில் டிராக்டர் மோதியதில் 9 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

அச்சன்புதூர்:
கடையநல்லூரில் டிராக்டர் மோதி 9 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். 

9 வயது சிறுமி 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கரியமாணிக்க பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதுரை. இவருடைய மகள் அபிநயா (வயது 9). 

இவள் நேற்று மாலை 6 மணி அளவில் மேலக்கடையநல்லூர் தேரடி திடல் அருகே சைக்கிளில் சென்று ெகாண்டிருந்தாள். 

பரிதாப சாவு  

அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக அபிநயா ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அபிநயா, டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிநயாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

டிரைவர் கைது 

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் 
டிரைவரான அதே பகுதியை சேர்ந்த வினோத் (28) என்பவரை கைது செய்தனர்.

டிராக்டர் மோதியதில் சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story