பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீவலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பூசைதுரை (வயது 46). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். பூசைதுரை நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பூசைதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி இறந்த பூசைதுரைக்கு காசிசெல்வி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story