கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை வந்து செல்லும் 26 விமானங்கள் தாமதம்
கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை வந்து செல்லும் 26 விமானங்கள் தாமதம் டெல்லி விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் நேற்று காலை 7 மணியில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும், சென்னைக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமாகின.
டெல்லியில் இருந்து காலை 7 மணிக்கு 107 பயணிகளுடன் வந்த தனியாா் விமானம், பனிமூட்டம் காரணமாக சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.
பெங்களூரு, ஐதராபாத், மும்பை, ஹூப்ளி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வரவேண்டிய 6 விமானங்களும், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, புவனேஸ்வா், ஹூப்ளி, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், புனே, சீரடி, தோகா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 20 விமானங்களும் என மொத்தம் 26 விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்து சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனா்.
Related Tags :
Next Story