மாசித் தெப்ப திருவிழா

மாசித் தெப்ப திருவிழா
x
தினத்தந்தி 28 Feb 2021 6:11 AM GMT (Updated: 28 Feb 2021 6:11 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின், 15-ம் ஆண்டு மாசித் தெப்ப திருவிழா கடந்த 24-ந் தேதி துவங்கியது.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின், 15-ம் ஆண்டு மாசித் தெப்ப திருவிழா கடந்த 24-ந் தேதி துவங்கியது.

நேற்று முன்தினம் மாலை முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், கோவிலின் அருகே உள்ள திருக்குளத்தில் சுவாமி 9 முறை தெப்பத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் பின்னர், ஊராட்சி மன்ற தலைவர் மதன் என்ற சத்யராஜ் ஏற்பாட்டில் 5-ம் ஆண்டாக 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருக்கண்டலம் ஊராட்சியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Next Story