தூத்துக்குடியில் கராத்தே புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி


தூத்துக்குடியில் கராத்தே புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி
x
தினத்தந்தி 28 Feb 2021 5:21 PM IST (Updated: 28 Feb 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்கம் சார்பில், கராத்தே தற்காப்பு கலையின் புதிய நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்கம் சார்பில், கராத்தே தற்காப்பு கலையின் புதிய நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று நடந்தது. பயிற்சிக்கு தஞ்சையை சேர்ந்த செந்தில்குமார் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். இந்த முகாமில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 200 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. நிகழ்ச்சியில் தொழில் அதிபர் கருப்பசாமி, ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். பயிற்சி ஏற்பாடுகளை சங்க செயலாளர் ரத்னகுமார், தலைவர் மாஸ்டர் சிவா, துணைத்தலைவர் விஜய்சேகர், நெல்லை டிராகன் சிட்டோ ரியூ சங்க செயலாளர் சுபாகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story