திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு தனி நபர்களிடம் பணம் கொடுத்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் வேண்டுகோள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு தனி நபர்களிடம் பணம் கொடுத்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் வேண்டுகோள்
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு தனி நபர்களிடம் பணம் கொடுத்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் என கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு தனி நபர்களிடம் பணம் கொடுத்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் என கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிதாக வரவேற்பு மையம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்களின் வசதிக்காக வரவேற்பு மையம் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் பக்தர்கள் கோவில் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ளலாம். 
கோவிலில் உள்ள உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை திடீர் ஆய்வு செய்தபோது கோவிலுக்கு தொடர்பில்லாத ஒரு நபர் பணியில் இருந்தது கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
பக்தர்கள் ஏமாற வேண்டாம்
பக்தர்கள் தங்களது தரிசனத்திற்கு தேவையான கட்டிணச் சீட்டுகளை, கோவிலில் கட்டணச்சீட்டு விற்பனை மையங்களில் இருந்து நேரடியாக கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். கோவில் தரிசனத்திற்கு தனி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். 
மேலும் இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ரூ.100-க்கான கட்டண சீட்டுகளை www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை நிகழ்வுகள் போன்ற விவரங்களை வரவேற்பு மைய தொலைபேசி எண். 04639-242270 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story