வாணியம்பாடி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைப்பு
வாணியம்பாடி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைப்பு
வாணியம்பாடி
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த26-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி கதேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் வைத்துள்ள பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாணியம்பாடி தொகுதியில், வருவாய் கோட்டாட்சியரும், வாணியம்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான காயத்திரி சுப்பிரமணி உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் என்ற அண்ணாமலை, பொதுப்பணித்துறை அதிகாரி செல்வி, கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நேற்று காலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் நகரம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் வைத்து இருந்த பேனர்களை அகற்றினர். சுவரொட்டிகளை அழிக்கும் பணியில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story