வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.


வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.
x

வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாடியதால், வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வாணியம்பாடி

சிறுத்தை நடமாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பத்தாப்பேட்டை பகுதி பாலாற்று கரையோரம் விவசாயி சாந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை பயிர்யிட்டு வருகிறர். அவர் வழம்போல  நேற்று காலை வாழை தோப்பை பார்வையிட்ட சென்றார்.

அப்போது வாழை தோப்பில் சிறுத்தை ஒன்று படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசார் மற்றும் வனத்துரையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கேமரா

தகவலின் பேரில் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது. சிறுத்தையின் கால் தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தினர். வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அருகில் உள்ள காப்புகாட்டு பகுதியில் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story