தூத்துக்குடி மாவட்டத்தில 148 ஆயுதப்படை போலீசார் தாலுகா போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம்


தூத்துக்குடி மாவட்டத்தில 148 ஆயுதப்படை போலீசார் தாலுகா போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2021 8:25 PM IST (Updated: 28 Feb 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 148 ஆயுதப்படை போலீசார் தாலுகா போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 148 ஆயுதப்படை போலீசார் தாலுகா போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 148 போலீசார், தாலுகா போலீஸ் நிலையங்களில் உள்ள காலி இடங்களில் பணி மூப்பு அடிப்படையில் போலீசாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நேற்று ஆயுதப்படையில் இருந்து விடுவிக்கப்பட்டு, போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கனிவுடன் விசாரித்து...
போலீசார் எப்போதும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்க வருகிறவர்களிடம் கனிவுடன் விசாரித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன்பாக நன்கு யோசித்து நியாயமாக செயல்பட வேண்டும். நமது குடும்பத்தினரை கவனிப்பது போன்று பொதுமக்களிடமும் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ஈஸ்வரமூர்த்தி, சுனைமுருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Next Story