எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடப்பட்டன
எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடப்பட்டன
பரமக்குடி,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. அதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதையொட்டி 4 சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.க்களும் பொருட்களையும், உடமைகளையும் அப்புறப்படுத்திக் கொடுக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பரமக்குடி ஓட்டப் பாலம் அருகில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்பட 4 சட்டமன்ற தொகுதி எல்.எல்.ஏ. அலுவலகங்கள்பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பரமக்குடியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகாலிங்கம், பரமக்குடி துணை தாசில்தார் ரெங்கராஜ், கிராம நிர்வாக அதிகாரி கணேசன், கிராம உதவியாளர் பூமி ஆகியோர்அலுவலகத்தை பூட்டினர். சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் வந்த பிறகு இந்த அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story