தம்பதி உள்பட 4 பேர் காயம்
வேடசந்தூர் அருகே கார், லாரி மோதியதில் தம்பதி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல்:
ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை முகமதுயாசீன் (24) என்பவர் ஓட்டி சென்றார்.
காரில் சிவக்குமார் (32), அவரது மனைவி கிரிஜா (26) உள்பட 4 பேர் இருந்தனர். வேடசந்தூர் அருகே கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் கார் வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் மோதியது.
இதில் கார் டிரைவர் முகமதுயாசீன், சிவக்குமார், கிரிஜா உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர்.
உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story