பரமக்குடி அருகே கருமலையான் கோவில் மாசி திருவிழா


பரமக்குடி அருகே கருமலையான் கோவில் மாசி திருவிழா
x
தினத்தந்தி 28 Feb 2021 8:49 PM IST (Updated: 28 Feb 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

கருமலையான் கோவில் மாசி திருவிழா நடைபெற்றது

பரமக்குடி, 
பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில்  கருமலை யான் கோவில் உள்ளது. அந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி களரி உற்சவ விழா நடைபெறும். இதையொட்டி கருமலையான், முனியப்பசாமி, பாப்பாத்தி ஆகிய சாமி ஆடிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு கிராமம் முழுவதும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு மஞ்சள் பொடி பூசி அருள்வாக்கு கூறினர். முன்னதாக கருமலையான் கோவிலில் கருங்குட்டி, செங்குட்டி, கரும்பு குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர்  பொங்கல் வைத்து கிடா வெட்டியும், கரும்பு தொட்டிகள் எடுத்தும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியின் அருளை பெற்றனர். சாமிகள் வீதி உலா வந்தபோது பெண்கள் மஞ்சள் தண்ணீர் கரைத்து ஊற்றியும், தேங்காய் உடைத்தும், சாமியை வழிபட்டனர்.இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயுராஜேந்திரன், அரியனேந்தல் கிராம தலைவர் ராமு, செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சிவக்குமார், நிர்வாகிகள் கருணாகரன், கலைப் பாண்டி, ஊராட்சி தலைவர் மணிமுத்து, முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜன், மலைராஜ், ராமசாமி, கோபால் உள்பட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story