விறுவிறுப்பாக நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம்


விறுவிறுப்பாக நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 28 Feb 2021 3:29 PM GMT (Updated: 28 Feb 2021 3:29 PM GMT)

கம்பம் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.

கம்பம்:

முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக்கின் 180-வது பிறந்தநாளை முன்னிட்டும் நாட்டுமாடுகளை பாதுகாக்கும் விதமாகவும் கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் 5 மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 

இதற்கு 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன்காட்சி கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், மாவட்ட செயலாளர் சலேத்து, பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விறுவிறுப்பு

இதில் சிறப்பு அழைப்பாளராக சினிமா இயக்குனர் களஞ்சியம் கலந்து கொண்டார். 

பந்தயத்தில் முயல் சிட்டு, தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, நடு மாடு, பெரியமாடு உள்பட 7 பிரிவுகளில் 227 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

 மாடுகளின் வயது, பிரிவுகளின் அடிப்படையில் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.
பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்ேவறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

பந்தயத்தின்போது மாடுகள் எல்ைலயை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. 

கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த பந்தயத்தை ரோட்டோரம் நின்று வேடிக்கை பார்த்தனர். 

அவர்கள் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


இதையடுத்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை ரொக்க பரிசுகள் மற்றும் தங்கநாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

Next Story