தேசிய அறிவியல் கண்காட்சி தின விழா


தேசிய அறிவியல் கண்காட்சி தின விழா
x
தினத்தந்தி 28 Feb 2021 3:47 PM GMT (Updated: 28 Feb 2021 3:47 PM GMT)

தேசிய அறிவியல் கண்காட்சி தின விழா நடைபெற்றது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூரில் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் கண்காட்சி தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பள்ளி தாளாளர் அய்யாச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் பாலமுருகன், ஒன்றிய தலைவர் ஆசிரியர் துரைப்பாண்டியன், கல்வி குழு பொருளாளர் முத்து முருகன், பள்ளி மேலாளர் ரவிச்சந்திரன், செல்வநாயகபுரம் ஆசிரியர் தமயந்தி, உடற்கல்வி ஆசிரியர் பால சுந்தர் மற்றும் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வசந்தா மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இதில் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி, அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளி முதுநிலை ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story