தாசில்தார்கள் பணியிடமாற்றம்


தாசில்தார்கள் பணியிடமாற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2021 9:25 PM IST (Updated: 28 Feb 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் தாசில் தார்களை நேற்று முன்தினம் மாலை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணியாற்றி வந்த செந்தில்வேல்முருகன் திருவாடானை தாசில்தாராகவும், முதுகுளத்தூர் தாசில்தார் முருகேசன் கீழக்கரைக்கும், முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் தமீம்ராசா பரமக்குடி தாசில்தாராகவும், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மார்டின் ராஜன் ராமேசுவரம் தாசில்தாராகவும், அரசு கேபிள் டி.வி.தனி தாசில்தார் செந்தில்குமார் முதுகுளத்தூர் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் ரவிச்சந்திரன் ராமநாதபுரம் தலைமையிட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய முருகவேல் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராகவும், திருவாடானை சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் கார்த்திகேயன் தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், கீழக்கரை தாசில்தார் வீரராஜா ராமநாதபுரம் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் சரவணன் தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக குற்றவியல் அலுவலக மேலாளர் கோபால் பரமக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம்
இதேபோல, ஆய மேற்பார்வை அலுவலர் சுரேஷ்குமார் குற்றவியல் அலுவலக மேலாளராகவும், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும், பரமக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அமலோற்பவ ஜெயராணி அரசு கேபிள்டி.வி. தாசில்தாராகவும், ராமேசுவரம் தாசில்தார் தியாகராஜன், முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், கமுதி தாசில்தார் செண்பகலதா ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், திருவாடானை தாசில்தார் மாதவன் கமுதிக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
 பரமக்குடி ஆதிதிராவிடர் தனி தாசில்தார் சிரோன்மணி ராமநாதபுரம் ஆய மேற்பார்வை அலுவலராகவும், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் ஜெயக்குமார் திருவாடானை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சபீதாள்பேகம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.

Next Story