காங்கேயம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை நிறைவடைந்தது.


காங்கேயம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை நிறைவடைந்தது.
x
தினத்தந்தி 28 Feb 2021 10:12 PM IST (Updated: 28 Feb 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை நிறைவடைந்தது.

காங்கேயம், 
காங்கேயம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை நிறைவடைந்தது. 
மக்காச்சோளம் சாகுபடி
காங்கேயம் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டு மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. பொதுவாகவே மக்காச்சோளம் மழைக்காலங்களில் பயிரிட்டால் அதிகளவில் தண்ணீர் தேவையிருக்காது. இதனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் மக்காச்சோளம் பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். 
கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகரித்ததால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை.. கடந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.1,450-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். நடப்பாண்டு விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கணிசமான அளவு பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். பி.ஏ.பி. தண்ணீர் திறக்கப்பட்டதும் மக்காச்சோள விதைப்பில் ஈடுபட்டனர். ஆனால் தொடர் மழையால் மக்காச்சோளம் பயிர்கள் அழுகியது. 
இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது “மக்காச்சோள விதை, உழவு, நடவு, கூலி, உரம், பூச்சி மருந்து, அறுவடை கூலி, அரவை கூலி, சோளத்தட்டு போர் போட கூலி என ஏக்கருக்கு ரூ.35ஆயிரம் செலவாகிறது. இப்போதைய விலையில்  4 மாதம் உழைத்ததற்கு எந்த பலனும் இல்லை” என்றனர். தற்போது  அறுவடை செய்யப்பட்டு அரவை செய்யப்பட்ட மக்காச்சோளம் குவிண்டால் ரூ.1,550வரையே, கொள்முதல் செய்யப்படுகிறது” என்றனர்.
விலை  உயரும்
இதுபற்றி மக்காச்சோள மொத்த வியாபாரிகள் கூறும்போது “ இந்த ஆண்டு மக்காச்சோள சாகுபடி பரப்பளவு குறைவுதான் என்றாலும் கோழி நிறுவனங்கள் இன்னும்,  அதிகளவில் உற்பத்தியில் ஈடுபடவில்லை. இதனால் மக்காச்சோளத்தின் தேவை  குறைவாக உள்ளது. வரும் மாதங்களில் தீவன உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது விலையும் கூடும்” என்றார்.

Next Story