சங்கராபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
சங்கராபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
சங்கராபுரம்
சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாண்டியன், சத்யநாராயணன், கல்வராயன் மலை தாசில்தார் அனந்தசயனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத்காதர் வரவேற்றார்.
சங்கராபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் கிராமத்தில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், பேனர்கள், கட்சி கொடி கம்பங்கள் ஆகியவற்றை அகற்றிட வேண்டும். அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கோவில்களில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும். தேர்தல் சம்பந்தமான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இதில் வருவாய் ஆய்வாளர்கள் திருமால், தாமோதரன், அண்ணாமலை, இளையராஜா, சதீஷ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story