மயிலாடுதுறைக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை
தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி மயிலாடுதுறைக்கு துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர்.
மயிலாடுதுறை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி மயிலாடுதுறைக்கு துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர்.
துணை ராணுவ வீரர்கள்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 26-ந் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியிட்டது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக நடத்திடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் மத்திய அரசின் இந்திய- திபெத் எல்லை பகுதியின் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் (துணை ராணுவ வீரர்கள்) வருகை தந்துள்ளனர்.
உதவி கமாண்டர் படைத்தளபதி அமித்திவேதி தலைமையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், மூன்று சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 91 பாதுகாப்பு படைவீரர்கள், 2 சிறப்பு பஸ்களில் சென்னையில் இருந்து மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரிக்கு நேற்று வருகை தந்து தங்கியுள்ளனர்.
3 சட்டசபை தொகுதிகள்
மேலும் பாதுகாப்பு படையின் உடைமைகள் ஒரு லாரி மூலம் வந்து இறங்கின. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும் இந்த பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
3 சட்டசபை தொகுதியிலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி முறையாக தேர்தல் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story