மாவட்ட செய்திகள்

எம்.எல்.ஏ. புகைப்படத்துடன் கூடிய அரிசி பைகள் பறிமுதல் + "||" + MLA Seizure of rice bags with photo

எம்.எல்.ஏ. புகைப்படத்துடன் கூடிய அரிசி பைகள் பறிமுதல்

எம்.எல்.ஏ. புகைப்படத்துடன் கூடிய அரிசி பைகள் பறிமுதல்
செஞ்சி அருகே எம்.எல்.ஏ. புகைப்படத்துடன் கூடிய அரிசி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செஞ்சி, 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் செஞ்சி அருகே ஒதியத்தூர் கிராமத்தில் தி.மு.க. சார்பில் அரிசி வினியோகம் செய்யப்படுவதாக தாலுகா அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செஞ்சி தாசில்தார் ராஜன் ஒதியத்தூர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள செல்வகுமார் என்பவரது வீட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. புகைப்படத்துடன் கூடிய 44 அரிசி பைகள் இருந்தன. அதை தாசில்தார் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.