துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்


துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Feb 2021 5:42 PM GMT (Updated: 28 Feb 2021 5:42 PM GMT)

உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டாா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டசபை தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக தங்களது துப்பாக்கிகளை தாங்கள் இருப்பிட எல்லைக்குட்பட்ட சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். தவறினால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களில் அச்சடிக்கப்படும் அரசியல் கட்சிகள் தொடர்புடைய விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் மற்றும் இதர வகைகளில் அச்சடிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவைகளில் அச்சகத்தின் பெயர், முகவரி (தொலைபேசி எண்ணுடன்) மற்றும் வெளியிடுபவரின் விவரங்களுடன் பிரசுரிக்க வேண்டும். தவறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story