திருச்செங்கோட்டில் உரிமம் இன்றி நடத்திய 4 மசாஜ் சென்டர்களுக்கு சீல்


திருச்செங்கோட்டில் உரிமம் இன்றி நடத்திய 4 மசாஜ் சென்டர்களுக்கு சீல்
x
தினத்தந்தி 28 Feb 2021 11:38 PM IST (Updated: 28 Feb 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் உரிமம் இன்றி நடத்திய 4 மசாஜ் சென்டர்களுக்கு சீல்

எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சங்ககிரி சாலையில் ஆயூர்வேதிக், ஆயுர் ஜோதிக், வடக்கு ரத வீதியில் உள்ள ஈவ்ஸ் மற்றும் வேலூர் சாலையில் உள்ள பசுமை ஆயுர்வேதிக் ஆகிய 4 மசாஜ் சென்டர்கள் அனுமதியின்றி நடத்தப்படுவதாக புகார் வந்தது. 
இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அதில் முறையான உரிமம் இன்றியும், அனுமதியும் இல்லாமல் மசாஜ் சென்டர்கள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த துணை தாசில்தார் சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் 4 மசாஜ் சென்டர்களையும் பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
========

Next Story