பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 Feb 2021 11:38 PM IST (Updated: 28 Feb 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சன்னிதி என்ற சன்னாசி பாண்டியன் (வயது 31). இவரை வழிப்பறி வழக்கில் திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா கடத்தல் வழக்கில் சித்ராவை (55) திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர். சன்னாசி பாண்டியன், சித்ரா ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story