தோகைமலையில் போலீஸ் அதிகாரி ஆய்வு


தோகைமலையில் போலீஸ் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 28 Feb 2021 11:52 PM IST (Updated: 28 Feb 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

தோகைமலையில் போலீஸ் அதிகாரி ஆய்வு செய்தார் .

தோகைமலை
தோகைமலை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வருகிற ஏப்ரல் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் தோகைமலை எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, சி.சி.டி. கேமிரா மூலம் தீவிரமாக கண்காணிக்க வேண்டு்ம் என தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து எல்லைப்பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

Next Story