கரூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல்


கரூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல்
x
தினத்தந்தி 28 Feb 2021 6:33 PM GMT (Updated: 28 Feb 2021 6:33 PM GMT)

கரூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கரூர்
எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சீல்
தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. இதன்படி மாநிலம் ழுழுவதும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் உள்ள கட்சி விளம்பரங்கள்,.சுவரொட்டிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகள் அகற்றப்ப டவேண்டும், தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டும் என்றும்  தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் கரூர், கோட்டை மேடு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள கரூர் எம்.எல்.ஏ. அலுவலகம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. அலுவலகம், குளித்தலை எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 
விளம்பர பதாகைகள் அகற்றம்
மேலும் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்ப பதாகைகளை அகற்றவும், கட்சி சுவர் விளம்பரங்களை சுண்ணாம்பு கொண்டு அழிக்கும் கட்சியினருக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தினர். 
அதன்படி பல்வேறு கட்சியினர் தங்களது விளம்பர பாதகைகளை அகற்றியும், சுவர் விளம்பரங்களை அழித்தும் வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story