திருப்பத்தூர் மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைப்பு
திருப்பத்தூர்
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 பறக்கும் படைகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படைகள் 24 மணி நேரமும் செயல்படும். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்குமேல் ரொக்கமாகவோ, ரூ.10 ஆயிரத்திற்குமேல் பொருட்களாகவோ எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்களர்களுக்கு பணம்பட்டுவாடா செய்வதை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும்படைகள் வீதம் 4 தொகுதிகளுக்கு மொத்தம் 12 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட, மாநில எல்லைகளில் 4 சோதனைச்சாவடிகள், மாவட்டத்திற்குள் 10 சோதனைச்சாவடிகள் என மொத்தம் 14 காவல் சோதனைச்சாவடிகளும் முழுமையாக கண்காணிக்கப்படும்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தோர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் விதிமுறைகள் குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பணியில் ஈடுப்படும் அனைத்து அலுவலர்களுக்கும் தொடர்ந்து முறையாக பயிற்சி வழங்க வேண்டும்.
341 கூடுதல் வாக்குச்சாவடிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,030 வாக்குச்சாவடிகள் இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடி மையங்களை பிரித்து கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதலாக 341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் தற்போது 1,371 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் செலவினங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக கண்காணித்து வேட்பாளர்களின் செலவினங்களில் சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story