லாலாபேட்டையில் மண்பானை விற்பனை படுஜோர்
வெயிலின் தாக்கம் அதிகரித்ததையடுத்து லாலாபேட்டையில் மண்பானை விற்பனை படுஜோராக நடக்கிறது.
லாலாபேட்டை
தொழிலாளர்கள்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதிகளில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு தொழில் நுணுக்கத்துடன் மண்பானைகள் தயாரிக்கின்றனர். இதில் தை மாதம் பொங்கல் பானை தயாரித்தல், கோடை காலங்களில் குளிர்ந்த நீர் பருக பெரியபானை, திருவிழா காலங்களில் அக்னி சட்டி, கஞ்சிக்கலயம் தயாரிப்பது, கார்த்திகை மாதங்களில் அகல் விளக்கு தயாரித்தல், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விநாயர் உருவபொம்மை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை களிமண்ணால் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
மண்பானை விற்பனை படுஜோர்
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் லாலாபேட்டையில் சாலையோரங்களில் நுங்கு, இளநீர், கரும்புச்சாறு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோடை காலத்தில் குளிர்ந்த நீர் பருக வசதியாக மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை செய்து விற்பனை செய்கின்றனர். இவற்றில் பெரியபானை ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மண்பானை விற்பனை படுஜோராக நடக்கிறது.
Related Tags :
Next Story