கரூருக்கு வந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழுவிற்கு வரவேற்பு


கரூருக்கு வந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழுவிற்கு வரவேற்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 6:40 PM GMT (Updated: 28 Feb 2021 6:40 PM GMT)

கரூருக்கு வந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழுவிற்கு வரவேற்பு

வெள்ளியணை
இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பாக சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக " கும்ப சந்டேஷ யாத்ரா " என்ற பிரசார பயணம் கன்னியாகுமரியிலிருந்து ஹரித்வார் வரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த பயணம் கடந்த மாதம் 26-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த பிரசார பயண குழுவினர் தாங்கள் வரும் வழியில் உள்ள மாவட்ட மக்களை சந்தித்து பிரசாரத்தை மேற்கொண்டு நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்தனர். பின்னர் கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நேற்று மாலை கரூர் மாவட்ட எல்லையான டி. கூடலூர் பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினரான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த கிராமியம் நாராயணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அக்குழுவினர் கோடங்கிபட்டி சாரதா மகளிர் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இன்று (திங்கட்கிழமை ) நடைபெறும் பிரச்சார விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். பின்னர் கரூர் மாவட்டத்தில் இருந்து கிளம்பி தொடர்ந்து பிரச்சார பயணத்தை மேற்கொள்ளும் குழுவினர் வரும் 31-ந்தேதி ஹரித்வாரில் நிறைவு செய்கின்றனர்.

Next Story