சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு


சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 1 March 2021 12:33 AM IST (Updated: 1 March 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர், 
நாகர்கோவிலில் ‘ஜப்பான் சிட்டோரியு சார்பில் கராத்தே டூ - இந்தியா’ அகில இந்திய ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து இண்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாடமி ஆப் இந்தியா சார்பில் சென்சாய், , செபஸ்தியான் தலைமையில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், அருண் குமார், கபிலன், கோகுல் கிருஷ்ணன், பாலஹரிகரன், சிவகுமார் ஜனா ஆகியோர் சாதனை படைத்து வெற்றி பெற்றனர். இவர்களை  பெற்றோர்களும், சோட்டோகான் கராத்தேபள்ளி ஆசிரியர்களும் பாராட்டினர். 

Next Story