தொப்பூரில் போலீசார் தீவிர வாகன சோதனை
தொப்பூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி,
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து, கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், தேர்தல் விதிமுறையை மீறி பணம் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க அன்பளிப்பு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறா? என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அரசியல் கட்சியினர் தங்களது கார்களில் கட்சி கொடியுடன் வருபவர்களை நிறுத்தி கொடிகளை அகற்றிய பிறகே மாவட்டத்தில் நுழைய போலீசார் அனுமதிக்கின்றனர்.
மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என போலீசார் சோதனை நடத்தினர். இந்த பணியை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாபானு ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story