எந்திரம் மூலம் நாற்று நடும் பணி மும்முரம்


எந்திரம் மூலம் நாற்று நடும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 28 Feb 2021 7:28 PM GMT (Updated: 28 Feb 2021 7:28 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் எந்திரம் மூலம் நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் எந்திரம் மூலம் நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
நாற்று நடும் பணி 
 வத்திராயிருப்பு பகுதியில் தற்போது கோடைகால நெல் நடவு செய்யும் பணியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 
 இந்தநிலையில் வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை செல்லும் சாலையில் மந்தித்தோப்பு பகுதியில் 10 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் எந்திரம் மூலம் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
வேலை ஆட்கள் 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோடை கால நெல் நாற்று நடவு பணி நடைபெற்று வருகிறது. 
இதனால் நாற்று நடும் வேலை ஆட்கள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஆவதால் நாங்கள் நாற்று நடும் பணியை எந்திரம் மூலம் மேற்கொண்டு வருகிறோம். 
இதனால் தங்களுக்கு நேரம் மற்றும் நாற்று நடும் வேலையாட்களின் செலவு குறைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story