இலவச மருத்துவ முகாம்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை, மார்ச்:
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், பாளையங்கோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பகுதி செயலாளர் ரபீக் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்அருணாசலம் முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜமாத் தலைவர் அப்பாஸ், த.ம.ஜ.க. மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பல் மருத்துவம், கண் பரிசோதனை, மகளிர் ஆலோசனை, இரத்த பரிசோதனை, சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் சார்லஸ் பிரேம்குமார் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story