நெல்லை- கன்னியாகுமரி இரட்டை வழி ரெயில் பாதை பணிகள் ஒரு வருடத்தில் முடிவடையும்- மதுரை கோட்ட மேலாளர் லெனின் பேட்டி
நெல்லை- கன்னியாகுமரி இரட்டை வழி ரெயில் பாதை பணிகள் ஒரு வருடத்தில் முடிவடையும் என மதுரை கோட்ட மேலாளர் லெனின் தெரிவித்தார்.
நெல்லை, மார்ச்:
நெல்லை-கன்னியாகுமரி இடையே இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையும் என்று மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் லெனின் தெரிவித்தார்.
ஆய்வு
தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் வரையும், கங்கைகொண்டானில் இருந்து நெல்லை வரையும் இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த இடத்தில் பாதைகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பாதையில் சிறப்பு ரெயில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய், ரெயிலின் வேகம் எப்படி செல்கிறது என்பதை ஆய்வு நடத்தினார். மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் லெனின், நெல்லை ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் வந்தனர்.
சிறப்பு ரெயில்
இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை ஆய்வு செய்த மதுரை கோட்ட மேலாளர் லெனின் நிருபர்களிடம் கூறியதாவது:-
இரட்டை வழி ரெயில் பாதை பணி முடிவடைந்த இடத்தில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. இது திருப்திகரமாக இருக்கிறது. இதனால் இந்த பாதையில் இனி 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்.
நெல்லையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி இன்னும் ஒரு ஆண்டுக்குள் முடிவடையும். மதுரையில் இருந்து நெல்லை வரை உள்ள இரட்டை வழிப்பாதை பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்க அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆகும். தற்போது 90 சதவீத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் ரெயில் இயக்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story