15 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 15 வட்டார வளர்ச்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 15 வட்டார வளர்ச்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும் கிராம வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் என 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 14 ஒன்றியங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும், வட்டார வளர்ச்சி, கிராம ஊராட்சி என 2 அதிகாரிகள் வீதம் மொத்தம் 28 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
தஞ்சை வட்டார வளர்ச்சி அதிகாரி அறிவானந்தம் அம்மாப்பேட்டைக்கும், அங்கிருந்த கணேசன் திருவையாறுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவையாறு வட்டார வளர்ச்சி அதிகாரி சுவாமிநாதன் கும்பகோணத்துக்கும், அங்கிருந்த ரமேஷ்பாபு பாபநாசத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவோணம்- பட்டுக்கோட்டை
பாபநாசத்தை சேர்ந்த செல்வேந்திரன் சேதுபாவாசத்திரத்துக்கும், அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தி தஞ்சைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருவோணம் வட்டார வளர்ச்சி அதிகாரி கோவிந்தராஜன் பேராவூரணிக்கும், அங்கிருந்த சடையப்பன் திருவோணத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி பெய்யாமொழி பேராவூரணிக்கும், அங்கிருந்த தவமணி திருவோணத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருவோணம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஜான்கென்னடி சேதுபாவாசத்திரத்துக்கும், அங்கிருந்த கோபாலகிருஷ்ணன் பட்டுக்கோட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பாபநாசம்-திருப்பனந்தாள்
திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அதிகாரி காந்திமதி பாபநாசத்துக்கும், அங்கிருந்த சிவக்குமார் திருப்பனந்தாளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கோவிந்தராவ் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story