மதுரையில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது
மதுரையில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது
மதுரை, மார்ச்.1-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, மேலூர் அரசு ஆஸ்பத்திரி, கள்ளந்திரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் 19 ஆயிரத்து 637 பேர் சுகாதாரப்பணியாளர்கள். 3 ஆயிரத்து 648 பேர் முன்களபணியாளர்கள். 3 ஆயிரத்து 289 பேர் காவல்துறை சார்ந்தவர்கள். இதுபோல், 45 பேர் ரெயில்வே காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள். இதுதவிர 3 ஆயிரத்து 341 பேர் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்க இருக்கிறது. இதற்காக ஏராளமானவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
மேலும், முதியவர்களின் வசதிக்காக கொரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story