2 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல்


2 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல்
x
தினத்தந்தி 1 March 2021 2:12 AM IST (Updated: 1 March 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

2 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல்

மேலூர், மார்ச்.1-
மேலூரில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. மேலும் 5 கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
கொள்ளை கும்பல்
மேலூர் பஸ் நிலையம் அருகே காந்திநகர் உள்ளது. இங்கு வசித்து வரும் கணேசன் என்பவரின் வீட்டிற்கு கொள்ளையர்கள் வந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்கதவை உடைத்து கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் வந்ததால் அந்த கொள்ளை கும்பல் தப்பியோடி விட்டது. இதையடுத்து அந்த கும்பல் வெங்கடேஷ்நகரை சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டின் கதவுகளை உடைத்து கெ ாண்டிருந்தனர். 
அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்தபோது அந்த மர்ம கும்பல் தப்பியோடி விட்டது. மேலும் அந்த கும்பல் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களின் கண்ணாடிகளை கற்களால் தாக்கி உடைத்துள்ளனர். நாகூர் அனிபா, பக்ருதீனின், பாலாஜி, நாராயணன் ஆகியோரது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.  
விசாரணை
இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா தலைமையிலான போலீசார் மற்றும் விரல்ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இப்பகுதியில் நடந்துள்ள தொடர் தாக்குதல் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே காந்திநகரில் இரவு நேர ரோந்துப்பணியை அதிகரித்து குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story