திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குறைந்த விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் கைதிகள்


திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குறைந்த விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் கைதிகள்
x
தினத்தந்தி 1 March 2021 2:14 AM IST (Updated: 1 March 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குறைந்த விலையில் ஆட்டு இறைச்சியை கைதிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில்
குறைந்த விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் கைதிகள்
கே.கே.நகர், மார்ச்.1-
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குறைந்த விலையில் ஆட்டு இறைச்சியை கைதிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
சிறை கைதிகள்
திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 1,300-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை பெற்று இருக்கும் நன்னடத்தை கைதிகளை கொண்டு சிறை வளாகத்தில் கரும்பு, நெல், தென்னை, மா, சோளம், தக்காளி, கத்தரி, சின்ன வெங்காயம், கேரட் போன்றவற்றை வேளாண்துறையின் அறிவுரைப்படி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கைதிகளால் சோப்பு, இனிப்பு வகைகள், உணவு ஆகியவை தயாரிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலை முன் சிறைவாசிகள் அங்காடி திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது திருச்சி மத்திய சிறைச்சாலை தோட்டத்தில் சிறைவாசிகளால் ஆடுகள் வளர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறைந்த விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை
இதில் 2 நன்னடத்தை கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு வழங்கப்படும் ஆடுகளை தற்போது, சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடி முன் இறைச்சியாக விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக வெளிச்சந்தையில் விற்கப்படும் விலையை விட இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி மத்திய சிறை அதிகாரிகளின் புதிய முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story