மாநில வலு தூக்கும் போட்டி: சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் அகில இந்திய போட்டிக்கு தேர்வு


மாநில வலு தூக்கும் போட்டி: சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் அகில இந்திய போட்டிக்கு தேர்வு
x
தினத்தந்தி 1 March 2021 2:27 AM IST (Updated: 1 March 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

மாநில வலு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் அகில இந்திய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில வலு தூக்கும் போட்டி:
சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள்
அகில இந்திய போட்டிக்கு தேர்வு
திருச்சி, மார்ச்.1-
திருச்சி காஜாமலை காலனி சமுதாய கூடத்தில் தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம், திருச்சி மாவட்ட வலு தூக்கும் சங்கம் சார்பில் மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி நடந்தது. போட்டிைய சங்கத்தின் மாநில தலைவர் அருள் மணி தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழகத்தி்ன் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். போட்டிகள் 53 கிலோ, 59, 63, 74, 93, 105, 120, 120 கிலோ எடைக்கு மேல் என்ற அடிப்படையில் நடந்தது. பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட், ஸ்குவார்டு என்ற பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் எடை தூக்கினார்கள். 
ஒவ்வொரு பிரிவிலும் அதிக எடை தூக்கி சாதனை படைத்தவர்களுக்கு ஸ்ட்ராங் மேன், ஸ்ட்ராங் உமன் என்ற சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட தலைவர் வண்டு ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினார்கள். மாநில போட்டியில் சாதனை படைத்தவர்கள் அகில இந்திய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அகில இந்திய வலு தூக்கும் போட்டி வருகிற 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் ஜாம்ஷெட் பூரில் நடை பெற உள்ளது. அதில் இவர்கள் தமிழகம் சார்பில் பங்கேற்பார்கள் என்று பயிற்சியாளர் சதீஷ்குமார் கூறினார்.

Next Story