அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி
அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
திருச்சி,
45 வயது முதல் 59 வயது வரையிலான நீரிழிவு, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆண் மற்றும் பெண்களுக்கும், 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும் கோவிட்-19 கொரோனா தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் போடப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ள செல்லும் போது ஆதார் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எடுத்துச்செல்லவேண்டும். மேலும் தடுப்பூசி போட விரும்புபவர்கள் கோவிட் செயலியில் சுய பதிவு செய்து கொண்டோ அல்லது நேரடியாகவோ தடுப்பூசி போடும் மையங்களுக்கு சென்று அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story