தவ்ஹீத் ஜமாத் மாநாடு


தவ்ஹீத் ஜமாத் மாநாடு
x
தினத்தந்தி 1 March 2021 2:40 AM IST (Updated: 1 March 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் மாநாடு நடந்தது.

அச்சன்புதூர், மார்ச்:
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடும்பவியல் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் நெல்லை யூசுப், செய்யது அலி, காஞ்சி இப்ராகிம், முகம்மது பைசல், மேலாண்மை குழு உறுப்பினர் முஹம்மது ஒலி, மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித், பொருளாளர் செய்யதுமசூது, துணை தலைவர் அப்துல் காதர், துணை செயலாளர்கள் அப்துல் சலாம், புகாரி, காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சம்சுல்லுஹா ரகுமானி, மாநில துணை பொது செயலாளர் அப்துல் கரீம், மாநில பேச்சாளர்கள் கோவை ரகுமத்துல்லா, அப்துல்ரகுமான், அப்துல் நாசர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
மாநாட்டில் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் தேசத் தியாகிகளின் தியாகத்தை பாடப்புத்தகத்தில் இயற்ற வேண்டும். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story