அரசு மருத்துவமனை ஊர்தி ஓட்டுனர், பணியாளர்கள் சங்க கூட்டம்


அரசு மருத்துவமனை ஊர்தி ஓட்டுனர், பணியாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 1 March 2021 3:23 AM IST (Updated: 1 March 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனை ஊர்தி ஓட்டுனர், பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

திருச்சி, 
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் ஊர்தி ஓட்டுனர், பணியாளர் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ருத்ரகோடீஸ்வரன், திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அரசு மருத்துவமனைகளில் ஊர்தி ஓட்டுனர்களாக 2010-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தவர்களை 6 மாதத்திற்கு ஒருமுறை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கைவிட்டு அனைத்து ஒப்பந்த ஊர்தி ஓட்டுனர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது ஊதிய குழு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஆணையில் குறிப்பிட்டபடி அனைத்து சலுகைகளையும் ஒப்பந்த ஊர்தி ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் திருச்சி மண்டல செயலாளர் ராஜாங்கம் நன்றி கூறினார்.

Next Story