சேலம் மாவட்டத்தில் 1,412 துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு


சேலம் மாவட்டத்தில் 1,412 துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு
x
தினத்தந்தி 28 Feb 2021 10:53 PM GMT (Updated: 28 Feb 2021 10:53 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 1,412 துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 1,412 துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிகள்
தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் அதனை அந்தந்த பகுதிகளில் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசியல்வாதிகள், தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் உரிமம் பெற்று 1,412 துப்பாக்கிகளை வைத்துள்ளனர். 
இதனை தேர்தல் காலத்தில் பயன்பாட்டில் வைத்திருக்க அனுமதியில்லை என்பதால், உடனே அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டுள்ளார்.
அவகாசம்
இதன்பேரில் கடந்த சில நாட்களாக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பெற்று வருகின்றனர். தேர்தல் முடிந்தபின், இந்த துப்பாக்கிகள் முறைப்படி திரும்ப ஒப்படைக்கப்படும். 
தற்போது துப்பாக்கிகளை ஒப்படைக்க 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story