வேலை கிடைக்காத விரக்தியில் திராவகம் குடித்து வாலிபர் தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில், திராவகம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,
ஆவடி திருவள்ளுவர் நகர் அன்பர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து உள்ள இவர், பல இடங்களில் வேலைக்காக விண்ணப்பித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவரது பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தனர். ஆனாலும் பெண்ணும் அமையவில்லை. ஒருபுறம் சரியான வேலையும், மறுபுறம் திருமணத்துக்கு பெண்ணும் கிடைக்காமல் சுரேஷ் மனம் உடைந்தார்.
திராவகம் குடித்து தற்கொலை
இதில் விரக்தி அடைந்த சுரேஷ், வீட்டில் இருந்த திராவகத்தை (ஆசிட்) குடித்து விட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
நீண்டநேரம் ஆகியும் அறையில் இருந்து அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அறைக்குள் சென்று பார்த்தபோது தங்கள் மகன் சுரேஷ் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story