முதல்-அமைச்சர் விருது பெற்ற தூத்துக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
முதல்-அமைச்சர் விருது பெற்ற தூத்துக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டப்பட்டார்.
தூத்துக்குடி:
ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கி வருகிறார். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்ப பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமிக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கி உள்ளார்.
அவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை சூப்பிரண்டு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story