புழல் சிறையில் வெளிநாட்டு கைதியிடம் செல்போன் பறிமுதல்
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் முகமது ஜாபர் அலி (வயது 36). இவர், வெளிநாட்டில் இருந்து போதை பொருள் கடத்தி வந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் தண்டனை சிறையில் 6-வது பிளாக்கில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் புழல் தண்டனை சிறையில் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். அப்போது முகமது ஜாபர் அலி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு கைதி முகமது ஜாபர் அலிக்கு செல்போன் கிடைத்தது எப்படி? அவர் செல்போனில் யாருடன் பேசிக்கொண்டிருந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story