தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சிங்காரவேலர் சிலை
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சிங்காரவேலர் சிலைக்கு மத்திய மந்திாி அமித்ஷா அடிக்கல் நாட்டினாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பருவதராஜகுல மீனவர் பொது அறக்கட்டளை நிறுவனரும், இ.எஸ்.கல்விக் குழும தலைவருமான கல்வியாளர் சாமிகண்ணு தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிங்காரவேலர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அறக்கட்டளை தலைவர் திருவள்ளூர் ராகவன், தமிழ் மாநில பருவதராஜகுல மீனவர் சங்க தலைவர் தர்மபுரி சரவணன், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், பரமசிவம், சங்க செயலாளர் தமிழரசு, அறக்கட்டளை செயலாளர் மகேந்திரன், பொருளாளர்கள் மணி, குப்புராஜ், துணைத்தலைவர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி செயலாளரும், பருவதராஜகுல மீனவர் பொது அறக்கட்டளை ஆலோசகருமான இ.எஸ்.செந்தில்குமார் செய்திருந்தார். முன்னதாக மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு தஞ்சாவூர் கலை வண்ணத்திலான விநாயகர் படம் மற்றும் ஏலக்காய் மாலையை மீனவர் பொது அறக்கட்டளை மற்றும் சங்கம் நிறுவனர் கல்வியாளர் சாமிக்கண்ணு வழங்கினார்.
Related Tags :
Next Story