தூத்துக்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
தூத்துக்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள், போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் உடையவர்களுக்கும் மார்ச் 1-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
தடுப்பூசி போடும் பணி
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 15 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, கொரோனா தடுப்பூசி டாக்டர் (பொறுப்பு) மாலையம்மாள் ஆகியோர் முன்னிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story